Film om vurdering // முட்டாள் காகம்

Fortelling om at det er viktig å vurdere før man gjør en handling

 

ஒரு ஊரில் ஒரு குளம் ஒன்று இருந்தது. அந்தக் குளத்தில் நிறைய மீன்கள் இருந்தன. அந்தக் குளத்தின் அருகில் பல காகங்கள் வசித்து வந்தன. அவை அந்த மீன்களைப் பிடிப்பதற்கு மிகவும் கடினப்பட்டன.
அங்கு வசித்த காகங்கள் எவ்வாறு மீன்களைப் பிடிக்கலாம் என ஆலோசித்தன. அவற்றில் ஒரு காகம் மிகவும் புத்திசாலி ஆகும். அத்துடன் விரைந்து பறக்கக் கூடிய ஆற்றலும் உடையது.
அதனால் பல காகங்கள் இந்தப் புத்திசாலிக் காகத்தை அனுப்பி மீனைப் பிடிக்கலாம் என முடிவெடுத்தன. புத்திசாலிக் காகமும் விரைந்து சென்று மீனைக் பிடித்துக் கொண்டு வந்து கொடுத்தது. எல்லாக் காகங்களும் புத்திசாலிக் காகத்தைப் பாராட்டின.
இதனைப் பொறுக்க முடியாத ஒரு காகம் இதென்ன பெரிய வேலையா? என அலட்சியமாகக் கேட்டது.

 

அதனைக் கேட்ட இன்னுமொரு காகம் அது தானே என ஒப்புக் கொண்டது. தானும் நாளையிலிருந்து மீன் பிடிக்கப் போகிறேன் என்றது.
புத்தசாலிக் காகம் இவை கதைப்பதைக் கேட்டது. தான் அவர்களிற்குப் பயிற்சி தருவதாகக் கூறியது. இதைக் கேட்டதும் அந்தக் காகங்கள் சிரித்தன. எமக்கு நீ பயிற்சி தருவதா? எனக் கேட்டுச் சிரித்தன. எம்மால் முடியும். எமக்குப் பயிற்சி எதுவும் தேவையில்லை என அலட்சியப் படுத்தின. இது ஆபத்தானது என மற்றைய காகங்களும் கூறின.
யார் சொல்வதையும் கேட்காமல் ஒரு முட்டாள் காகம் மறுநாட் காலை மீன் பிடிக்கச் சென்றது. பறந்து போய்க் குளத்திலிருந்த மீனைப் பிடிக்கத் தலையை நீருக்குள் விட்டது. பயிற்சி இல்லாததால் அதனால் உடனே தலையை வெளியே எடுக்க முடியவில்லை. அதற்குள் கீழே இருந்து வந்து ஏதோ ஒன்று அதனை இழுத்துச் சென்று விட்டது. காகமும் வீணாக உயிரை விட்டது.
வீண்பெருமை பேசுபவர்களின் கதையைக் கேட்டு வீணாக உயிரைத் துறந்தது.