
சூனியக்காரி டெக்டீர்
HEKSEN DHEGDHEER

முன்னொரு காலத்தில், சோமாலியாவின் ஒரு கிராமத்தில், இரண்டு சகோதரர்கள் வாழ்ந்து வந்தார்கள். ஒரு நாள், அவர்கள் கிராமத்திற்கு வெளியே இருந்த காட்டைச் சுற்றிப் பார்க்க முடிவு செய்தார்கள்.
அவர்கள் வீட்டிலிருந்து நடந்து வெகுதூரம் சென்றுவிட்டார்கள். அப்போது இருட்டத் தொடங்கியது.
Det var en gang to brødre som bodde i en landsby i Somalia. En dag bestemte de seg for å utforske skogen utenfor landsbyen.
Etter at de hadde gått lenge og var langt hjemmefra, begynte det å bli mørkt.

இருட்டில் நெருப்பு எரிந்து கொண்டிருப்பதைச் சிறுவர்கள் பார்த்தார்கள். அதை நோக்கிச் செல்ல முடிவு செய்தார்கள். அருகில் சென்றபோது, நெருப்புக்குப் பக்கத்தில் யாரோ அமர்ந்திருப்பதைக் கண்டார்கள்.
அங்கே ஒரு வயதான பெண்மணி அமர்ந்திருந்தார். அவர் சிறுவர்களைப் பார்த்துப் புன்னகைத்து, “உங்களுக்குக் களைப்பாக இருக்குமே? வாருங்கள், இங்கே என் அருகில் உட்காருங்கள். நான் உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன்,” என்றார்.
Barna fikk øye på et bål som lyste i mørket, og bestemte seg for å gå mot det. Da de kom nærmere, så de at det satt noen ved bålet.
Det var en gammel dame. Hun smilte til dem og spurte: «Dere er sikkert slitne? Kom og sett dere her hos meg, så skal jeg fortelle dere en historie.»

“முன்னொரு காலத்தில்…” என்று அவர் கதையைத் தொடங்கினார். “ஒரு சிறிய குடும்பம் வாழ்ந்து வந்தது. அந்தக் குடும்பத்தில் ஒரு அம்மா, ஒரு அப்பா, ஒரு சிறுமி இருந்தார்கள்.”
«Det var en gang …» begynte hun… «en liten familie som bestod av en mor, en far og en liten jente».

அம்மாவின் பெயர் அயான், அப்பாவின் பெயர் உமர், மகளின் பெயர் சஹ்ரா.
Moren het Ayaan, faren het Omar og datteren het Sahra.

ஒரு நாள், அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இறுதியில், அம்மாவுக்கு மிகவும் கோபம் வந்து விட்டது.அதனால் சஹ்ராவை அழைத்துக்கொண்டு சிறிது தூரம் நடக்கச் சென்றார்.
En dag ble foreldrene veldig uenige. Moren ble til slutt så irritert at hun tok med seg Sahra for å gå seg en tur.

சஹ்ராவும் அவளுடைய அம்மாவும் நாள் முழுவதும் நடந்து, காட்டின் வெகுதூரம் உள்ளே சென்றுவிட்டார்கள். நேரமாகிவிட்டது. அவர்கள் வீட்டிலிருந்து வெகுதூரத்தில் இருந்தார்கள். சூரியன் மறைந்துவிட்டதால், காட்டில் இருட்டாக இருந்தது.
சஹ்ரா சொன்னாள்: “அம்மா, எனக்கு மிகவும் களைப்பாக இருக்கிறது. இனிமேல் என்னால் நடக்க முடியாது!”
அந்த நேரத்தில், காட்டின் நடுவில் ஒரு வீடு இருப்பதை அம்மா பார்த்தார். அங்கே யாராவது இருக்கிறார்களா என்று பார்க்க முடிவு செய்தார்.
Sahra og moren gikk hele dagen og havnet langt inne i skogen. Det begynte å bli sent, og de var langt hjemmefra. Solen hadde gått ned, og det var mørkt i skogen.
Sahra sa: “Mamma, jeg er så sliten. Nå orker jeg ikke å gå mer!”
Akkurat da fikk moren øye på et hus midt inne i skogen, og bestemte seg for å se om noen var hjemme.

அவர்கள் வீட்டின் அருகே சென்றபோது, கதவு திறந்தது. வாசலில் உயரமான, அழகாக உடையணிந்த ஒரு பெண் நின்றுகொண்டிருந்தாள். அவள் நீளமான வெள்ளை நிற ஆடையும், பளபளக்கும் தங்க நகைகளும், ஆரஞ்சு நிறத் தலைத்துணியும் அணிந்திருந்தாள். அவள் அவர்களைப் பார்த்துப் புன்னகைத்து, வீட்டிற்குள் வரவேற்றாள்.
Da de kom bort til huset, åpnet døren seg. En elegant, høy dame sto i døråpningen. Hun hadde på seg en lang, hvit kjole, blanke gullsmykker og et oransje hodeplagg. Hun smilte til dem og ønsket dem velkommen inn.

வீட்டிற்குள் ஒரு பெரிய அறை இருந்தது. அந்த அறையில் பெரிய மேசை ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது . மேசையின் நடுவில், சுவையான உணவுகளால் நிரம்பிய பெரிய மரத் தட்டங்களும் வைக்கப்பட்டிருந்தன.
அந்தப் பெண் சஹ்ராவையும் அவளுடைய அம்மாவையும் மேசையின் அருகே அமர அழைத்தாள். அவர்கள் விரும்பிய அளவுக்கு உணவு சாப்பிடலாம் என்று கூறினாள்.
Inne i huset var det et stort rom med et digert bord, og midt på bordet sto et xeero, et stort trefat, fylt med nydelig mat. Damen inviterte Sahra og moren til å sette seg ved bordet og sa at de kunne spise så mye de ville.

அவர்கள் சாப்பிட்டு முடித்ததும், சஹ்ரா மேசையை விட்டு எழுந்து ஜன்னல் வழியாக வெளியே பார்த்தாள். அந்த வீட்டில் வசித்த பெண் வெளியே சென்றிருந்தாள். அவள் வீட்டிற்கு வெளியே எரிந்து கொண்டிருந்த நெருப்பைச் சுற்றி நடனமாடுவதைச் சஹ்ரா பார்த்தாள்.
திடீரென்று, அந்தப் பெண் தன் தலைத்துணியை அகற்றினாள். உடனே அவளுடைய இரண்டு நீண்ட காதுகள் வெளியே விழுந்தன. அவள் பாடுவதைச் சஹ்ரா கேட்டாள்:
“அச்சம் உடையோர்
சுவையற்ற விருந்து
மகிழ்ச்சி உடையோர்
சுவையான விருந்து!”
Da de var ferdige med å spise, gikk Sahra fra bordet og tittet ut av vinduet. Damen som bodde i huset hadde gått ut, og Sahra så henne danse rundt et bål utenfor huset.
Plutselig tok damen av seg hodeplagget, og ut falt to lange ører. Sahra hørte henne synge:
«Skremte folk er dårlig mat, men glade folk er gode på fat!».

சஹ்ரா அதிர்ச்சியில் உறைந்து போனாள். அவளுடைய அம்மா ஜன்னலுக்கு அருகில் வந்து வெளியே பார்த்தார்.
அவர் திடுக்கிட்டுக் கூச்சலிட்டார்: “அந்த நீண்ட காதுகளைப் பார்! அது சூனியக்காரி டெக்டீர் தான்!”
அவர் சஹ்ராவின் கையைப் பிடித்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியே ஓடினார்.
Sahra gispet! Moren kom bort til vinduet og så ut. Hun utbrøt: «Se på de lange ørene! Det er jo heksen Dhegdheer!» Hun tok Sahra i hånden og løp ut av huset.

அவர்கள் காட்டிற்குள் ஓடினார்கள். அவர்களுக்குப் பின்னாலேயே சூனியக்காரி டெக்டீர் பாடிக்கொண்டிருப்பது அவர்களுக்குக் கேட்டது.
“அச்சம் உடையோர்
சுவையற்ற விருந்து
மகிழ்ச்சி உடையோர்
சுவையான விருந்து!”
De løp gjennom skogen mens de hørte heksen Dhegdeer synge like bak dem:
«Skremte folk er dårlig mat, men glade folk er gode på fat!».

அவர்கள் ஒரு ஆற்றங்கரையை அடைந்தார்கள். அப்போது, அவர்களுக்கு நன்கு தெரிந்த ஒரு குரல், “அயான்! சஹ்ராவை இந்தப் பக்கம் தூக்கி எறி!” என்று கூப்பிடுவதைக் கேட்டார்கள்.
அது சஹ்ராவின் அப்பா உமரின் குரல். அம்மா சஹ்ராவை ஆற்றின் மறுகரையில் இருந்த அப்பாவிடம் தூக்கி எறிந்தார். பிறகு அவரும் ஆற்றில் குதித்தார். தன்னால் முடிந்தவரை வேகமாக நீந்தி மறுகரையை அடைந்தார்.
De kom til en elv og hørte en velkjent stemme rope: «Ayaan! Kast Sahra over!» Det var Omar, pappaen til Sahra. Moren kastet Sahra over, før hun selv hoppet ut i elven. Hun svømte over til den andre siden så fort hun kunne.

சூனியக்காரி டெக்டீருக்கு நீந்தத் தெரியாததால், அவர்களைப் பிடிக்க முடியவில்லை.
Heksen Dhegdheer kunne ikke svømme og fikk derfor ikke tak i dem.

“அந்தச் சிறிய குடும்பம் மீண்டும் ஒன்றாகச் சேர்ந்தது. அவர்கள் இணைந்து மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள்” என்று நெருப்பின் அருகே அமர்ந்திருந்த வயதான பெண்மணி கூறித் தனது கதையை முடித்தார்.
அந்த இரண்டு சிறுவர்களுக்கும் சூனியக்காரி மற்றும் குடும்பத்தையும் பற்றிய கதை விறுவிறுப்பாக இருந்ததால் மிகவும் பிடித்தது. கதை மகிழ்ச்சியாக முடிந்ததால் அவர்கள் சந்தோஷப்பட்டார்கள்.
“Den lille familien var sammen igjen. De holdt rundt hverandre og var lykkelige”, fortalte den gamle damen ved bålet og avsluttet historien.
De to barna synes fortellingen om familien og heksen var spennende, og de var glade for at historien hadde en lykkelig slutt.

“உங்களுக்குக் கதை பிடித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி,” என்று வயதான பெண்மணி கூறிவிட்டு மெதுவாக எழுந்து நின்றார். அவர் தன் தலைத்துணியை அகற்றினார். உடனே அவருடைய இரண்டு நீண்ட காதுகள் வெளியே விழுந்தன. சகோதரர்கள் இருவரும் அதிர்ச்சியில் மூர்ச்சை இழந்தார்கள்!
சூனியக்காரி அவர்களைப் பார்த்துச் சிரித்தாள். பிறகு பாடத் தொடங்கினாள்:
“அச்சம் உடையோர்
சுவையற்ற விருந்து
மகிழ்ச்சி உடையோர்
சுவையான விருந்து!”
கதையும் முடிந்தது விடிவெள்ளியும் வந்தது.
«Så bra at dere likte historien», sa den gamle damen og reiste seg sakte. Hun tok av seg hodeplagget, og ut falt det to lange ører. Brødrene gispet!
Heksen så på dem og lo, og så begynte hun å synge:
«Skremte folk er dårlig mat, men glade folk er gode på fat!».
Snipp, snapp, snute, så var eventyret ute.
Heksen Dhegdheer//சூனியக்காரி டெக்டீர்
Illustrasjoner og forsidedesign: Mari Helén Holum med innspill av forfatter og kulturformidler Ali Mohammed og lærer Sid Omar Mohamud Ahmed
Revidert i 2026 av Nasjonalt senter for flerkulturell opplæring
Kvalitetssikring og lyd på tamil: Vanaja Uthayakumaran
ISBN:
Copyright © 2026 · NAFO
Lisensiert under en CC BY-NC-ND 4.0 Navngivelse-IkkeKommersiell-IngenBearbeidelser 4.0 Internasjonal lisens.




Du finner flere flerspråklige fortellinger gratis på morsmål.no/fortellinger
![]()
Der finner du også tilleggsressurser og lydstøtte til fortellingene.
Copyright © 2026 · NAFO
Lisensiert under en CC BY-NC-ND 4.0 Navngivelse-IkkeKommersiell-IngenBearbeidelser 4.0 Internasjonal lisens.