Spotify

கொசுக்கள் எவ்வாறு சாப்மிக்கு வந்தன!
HVORDAN MYGGEN KOM TIL SÁPMI

முன்னொரு காலத்தில் வெகு தொலைவில் வடக்கே உள்ள சாப்மி என்ற பகுதியிலுள்ள சீடா குக்கிராமத்தில் பல குடும்பங்கள் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். அக் குக்கிராமத்தில் ஒரு வயதான பெண்மணியான ஓக்கா என்பவர் வாழ்ந்து வந்தார். ஓக்கா சிறிய உடல்வாகு கொண்டவர். அவர் வேகமாகவும் சுறுசுறுப்பாகவும் செயற்படுவார். அவர் தனது குடும்பத்தினருடன் ஒரு சிறு மண்குடிசையில் வாழ்ந்து வந்தார். அவர் குழந்தைகளுடனும் தனது நாயுடனும் மிகவும் விரும்பி விளையாடுவார். அந்தக் குடிசை ஒரு ஆற்றின் அருகில் இருந்தது. அவ் ஆற்றிலிருந்து தமக்குத் தேவையான தண்ணீரையும் மீன்களையும் பிடித்து வாழ்ந்து வந்தனர்.
For lenge siden, langt mot nord, i Sápmi, bodde det flere familier sammen i en siida, en liten landsby. I siidaen bodde det en Áhkká, en gammel kone. Áhkká var liten, rask og driftig. Hun bodde i en jordgamme sammen med familien sin og hunden Ránne, som barna elsket å leke med. Gammen lå ved siden av en elv, der familien hentet vann og fisket.

ஒருநாள் ஓக்கா ஆற்றங்கரைக்கு தண்ணீர் எடுக்கச் சென்றபோது வானம் பிளவுபட அங்கிருந்து பூமியைப் படைத்தவர் அவளிடம் இறங்கி வந்தார். பூமியைப் படைத்தவர் அப்போது தான் கொசுக்களை உருவாக்கியிருந்தார். அவர் கொசுக்களை சாக்கினுள் வைத்து இரட்டை முடிச்சும் போட்டு, இறுக்கமாகக் கட்டியிருந்தார். அந்தச் சாக்கின் உள்ளே என்ன இருக்கிறது என்று ஓக்காவிடம் சொல்லாமல் அவளிடம் கொடுத்து, அதை மிகவும் கவனமாகப் பாதுகாக்கும்படி கேட்டுக்கொண்டார். தன் மீது வைத்த நம்பிக்கைக்காக ஓக்கா நன்றி கூறி, அச் சாக்கினைப் பெற்றுக்கொண்டாள். அதை ஒருபோதும் திறக்கமாட்டேன் என்றும் வேறு யாரிடமும் கொடுக்கமாட்டேன் என்றும் அவள் வாக்குறுதி அளித்தாள்.
En dag da Áhkká var nede ved elven for å hente vann, åpnet himmelen seg, og jordens skaper kom ned til henne.
Jordens skaper hadde nettopp skapt myggen og puttet hele myggsvermen i en sekk og knytt den stramt igjen med dobbeltknute. Han ga sekken til Áhkká, uten å fortelle henne hva som var inni den, og ba henne om å passe godt på den.
Áhkká takket for tilliten og tok imot sekken. Hun lovet at hun aldri skulle åpne den eller gi den til noen andre.

ஓக்கா அந்தச் சாக்கை தன் மண்குடிசைக்கு எடுத்துச் சென்று, குழந்தைகளோ நாயோ அதைத் தொட்டிடாதவாறு மிகவும் கவனமாகப் பாதுகாத்தாள். அதனால் அவள் அந்தச் சாக்கை எங்கு சென்றாலும் தன்னுடன் எடுத்துச் சென்றாள். வேலை செய்ய வெளியே செல்லும்போதும் அதைத் தன்னுடன் எடுத்துச் சென்றாள். இரவில் தூங்கும்போதும் அந்தச் சாக்கைத் தன் தலையின் கீழ் வைத்து தலையணையாகப் பயன்படுத்தினாள். ஆனால் அந்தச் சாக்கின் உள்ளே ஏதோ ஒன்று ,எப்போதும் ரீங்காரமிட்டு விதவிதமான சத்தங்களை எழுப்பிக் கொண்டிருப்பது அவளுக்குக் கேட்டுக் கொண்டிருந்தது .
Áhkká tok med seg sekken til gammen og passet godt på den slik at verken barna eller hunden fikk tak i den. Derfor hadde hun den med seg overalt. Hun tok den med seg ut når hun skulle jobbe, og når hun skulle sove, la hun den under hodet og brukte den som hodepute. Men hele tiden kunne hun høre at noe i sekken summet og laget lyder.

ஓக்காவுக்கு சாக்கின் உள்ளே என்ன ரீங்காரமிட்டுக் கொண்டிருக்கிறது என்று தெரிந்து கொள்ள மிகுந்த ஆர்வமாக இருந்தது. அவள் உள்ளே எட்டிப் பார்க்க விரும்பினாள். ஆனால் சாக்கைத் திறக்கமாட்டேன் என்று கொடுத்திருந்த வாக்குறுதி அவளுக்கு நினைவுக்கு வந்தது. இரவும் பகலும் சாக்கினுள்ளே கொசுக்கள் இடைவிடாமல் அசைந்து சத்தம் போட்டுக் கொண்டே இருந்தன. ஓக்கா அந்த ரீங்காரச் சத்தத்தால் மிகவும் சலித்துப் போனாள்.
–” தயவுசெய்து அமைதியாக இருங்கள்” என்று அவள் அந்தச் சாக்கைப் பார்த்து மெதுவாகச் சொன்னாள்.
ஆனால் சிறைப்பட்டு வாழ்வதற்காக கொசுக்கள் உருவாக்கப்படவில்லை. அவை இரவும் பகலும் தொடர்ந்து ரீங்காரமிட்டும் பறந்தும் அசைந்தும் கொண்டிருந்தன. ஓக்காவுக்கு ஒரு கணம் கூட அமைதி கிடைக்கவில்லை.
Áhkká var veldig nysgjerrig på hva som summet i sekken. Hun ville gjerne kikke, men husket at hun hadde lovet å ikke åpne den.
Myggen holdt liv og røre i sekken døgnet rundt, og Áhkká ble stadig mer lei av summinga.
– Vær så snill, vær stille, hysjet hun på sekken. Men myggen var ikke skapt for et liv i fangenskap. De fortsatte å summe og svirre natt og dag. Det var aldri fred å få.

ஓக்காவால் அதற்கு மேல் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. சாக்கினுள்ளே அந்தச் சத்தத்தை என்ன எழுப்புகிறது எனத் தெரிந்து கொள்ள விரும்பினாள் . “நான் உண்மையில் எதைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறேன் என்பதைத் தெரிந்து கொள்வது நியாயம் தானே” என்று ஓக்கா நினைத்தாள். அதனால் சாக்கினுள் இருப்பதைப் பார்ப்பதற்காக அதைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த கயிற்றை மிகவும் கவனமாகத் தளர்த்தினாள்.
Til slutt holdt hun ikke ut lenger, hun måtte finne ut hva som lagde lydene i sekken.
– Det ville vel være både rett og rimelig å få vite hva jeg egentlig passer på, tenkte Áhkká. Hun løsnet forsiktig på snora rundt sekken, slik at hun kunne se hva som var inni den.

ஓக்காவால் என்ன நடக்கிறது என்று உணர்வதற்குள் சாக்கிலிருந்த கொசுக்கள் பறந்து வெளியேறின. அவை எல்லாத் திசைகளிலும் கூட்டமாகப் பறந்து சென்று மனிதர்களையும் விலங்குகளையும் கடித்தன! ஓக்கா மிகவும் பதறிப் போனாள்! அவள் கொசுக்களின் பின்னால் ஓடி அவற்றை மீண்டும் சாக்கினுள் பிடித்துப் போட முயன்றாள். ஆனால் அது முற்றிலும் முடியாத காரியமாக இருந்தது. ஏனெனில் கொசுக்கள் எண்ணற்றவையாகவும் மிக மிகச் சிறியவையாகவும் இருந்தன. கொசுக்கள் சுதந்திரமாகப் பறந்தன!
Før hun visste ordet av det, fløy det mygg ut av sekken. Myggen svermet til alle kanter og stakk både mennesker og dyr!
Áhkká ble helt forskrekket! Hun løp etter myggen og prøvde å fange dem i sekken igjen, men det var helt umulig, fordi de var så veldig mange og så bittesmå.
Myggen var fri!

ஓக்காவிடம் அந்தச் சாக்கைக் கொடுக்கும் போதே அவள் விரைவில் அதனால் சலிப்படைந்து கொசுக்களை விடுதலை செய்துவிடுவாள் என்பதை பூமியைப் படைத்தவர் அப்போதே அறிந்திருந்தார். கொசுக்கள் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் தொந்தரவாக இருக்கலாம். ஆனால் அவை மிகவும் பயனுள்ளவையாகும். பறவைகளுக்கும் மீன்களுக்கும் கொசுக்கள் அவசியமான உணவாகும். அத்துடன் பூக்களும் பிற தாவரங்களும் பரவுவதற்கும் கொசுக்கள் உதவுகின்றன. கொசுக்கள் சாமர் இனத்தவரின் பணியாளர்கள். அவர்களின் சிறந்த உதவியாளர்களும் ஆகும். அவை கலைமான்களை ஒன்றாகச் சேர்க்க உதவுகின்றன. கலைமான்களை உயர்ந்த மலைப்பகுதிகளுக்குத் துரத்திச் செல்ல உதவுகின்றன.
Den gangen da jordens skaper ba Áhkká om å passe på sekken, skjønte han at hun fort ville bli lei og slippe myggen fri.
Selv om mygg kan være plagsomme for mennesker og dyr, er de også nyttige. For fugl og fisk er mygg nødvendig mat, og myggen hjelper blomster og andre vekster med å spre seg.
Myggen er også samenes biigá, samenes gode hjelper. De hjelper til med å samle reinflokken ved å jage reinsdyrene til høyfjellet.

ஓக்காவினால் அந்தச் கொசுக்கள் வெளியேறிய நாளிலிருந்து, ஒவ்வொரு கோடைகாலத்துக்கும் கொசுக்கள் மீண்டும் சாம்பிக்கு வந்து கொண்டிருக்கின்றன. கொசுக்கள் எப்படியாயினும் (சங்க்தான்ஸ்) எனப்படும் கோடைகால நடுப்பகுதிக்குள் திரும்பி வந்துவிடும் என்று சொல்லப்படுகிறது. பறந்து வரும் வழியில் தேவையாயின் குச்சிகளை பயன்படுத்துவதற்காக எடுத்து வரும் என்றும் கூறப்படுகிறது. இவ்வாறுதான் கொசுக்கள் சாம்பிக்கு வந்தன!
Helt siden den gangen Áhkká åpnet sekken, og myggen kom seg ut, har myggen kommet tilbake til Sápmi hver eneste sommer.
Det sies at myggen alltid kommer tilbake innen Sankthans, om den så må ta staver til hjelp for å komme frem.
Og slik gikk det til at myggen kom til Sápmi!
Hvordan myggen kom til Sápmi// கொசுக்கள் எவ்வாறு சாப்மிக்கு வந்தன!
Illustrasjoner: Gunnlaug Ballovarre
Forsidedesign: Mari Helén Holum
Utgitt av Nasjonalt senter for samisk i opplæringa og Nasjonalt senter for flerkulturell opplæring


Den samiske fortellertradisjonen har blitt tatt vare på gjennom muntlig overlevering i flere generasjoner. Denne versjonen av fortellingen er en gjendiktning av et tradisjonelt samisk eventyr. Enkelte ord i denne fortellingen er på nordsamisk.
Korrektur og lyd på tamil og norsk bokmål: Vanaja Uthayakumaran
ISBN:
Copyright © 2026 · Nasjonalt senter for samisk i opplæringa · Nasjonalt senter for flerkulturell opplæri]





Du finner flere flerspråklige fortellinger gratis på morsmål.no/fortellinger
![]()
Der finner du også tilleggsressurser og lydstøtte til fortellingene.
Copyright © 2026
Nasjonalt senter for samisk i opplæringa
Nasjonalt senter for flerkulturell opplæring
Lisensiert under en CC BY-NC-ND 4.0 Navngivelse-IkkeKommersiell-IngenBearbeidelser 4.0 Internasjonal lisens.
